சுங்கச் சாவடி கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய், அடுத்த 5 ஆண்டுகளில், ஒரு லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்‍கை

Oct 15 2019 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டில் சுங்கச் சாவடி கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய், அடுத்த 5 ஆண்டுகளில், ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அதிகரிக்கும் என மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலை போக்‍குவரத்து அமைச்சர் திரு. நிதின் கட்கரி, நாட்டில், 24 ஆயிரத்து 996 கிலோ மீட்டர் தொலைவு நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இந்த ஆண்டு இறுதியில் இது 27 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல், சுங்கச் சாவடி கட்டண வசூல், முழுமையாக, மின்னணு முறைக்கு மாறிவிடும் என்று கூறிய அவர், இதன் மூலம் சுங்கச் சாவடி கட்டண வசூலில் இருந்த பிரச்னைகள் முழுமையாக நீங்கிவிடும் என்று தெரிவித்தார்.

மேலும் முழுமையான மின்னணு முறையால், அடுத்த 5 ஆண்டுகளில் சுங்கச் சாவடி மூலம் கிடைக்கும் கட்டண வருவாய், ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் திரு. கட்கரி குறிப்பிட்டார். இதன் மூலம் மேலும் பல தரமான சாலைகளை அமைக்க முடியும் என்று அவர் நம்பிக்‍கை தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00