கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Nov 13 2019 2:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்பதாகவும், அவர்களை பா.ஜ.க.,வில் சேர்ப்பது குறித்து, கட்சி மேலிடத்துடன் பேசி முடி‍வெடுக்கப்படும் என்றும், கர்நாடக மாநில முதலமைச்சர் திரு. எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்த வழக்கில், சபாநாயகர் உத்தரவு செல்லும் என்றும், இடைத்தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து, பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய, கர்நாடக முதலமைச்சர் திரு. எடியூரப்பா, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகவும், இடைத்தேர்தலில், 17 தொகுதிகளிலும் பா.ஜ.க., வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.

17 தகுதி நீக்க எம்.எல்.ஏ.,க்களும் பா.ஜ.க.,வில் இணைய உள்ளனரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடியூரப்பா, இது தொடர்பாக கட்சி மேலிடத்துடனும், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்களுட‌னும் பேசி முடிவெடுக்கப்பட்டு, இன்று மாலை அறிவிக்கப்படும் என்று சூசகமாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00