ஆட்சியில் சம பங்கு கேட்டது குறித்து உரிய நேரத்தில் பிரதமர் மோடியிடம் தெரிவிக்கவில்லை : பாஜ.க. தலைவர் அமித்ஷா மீது சிவசேனா பகிரங்க குற்றச்சாட்டு

Nov 14 2019 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆட்சியில் சம பங்கு கேட்டது குறித்து, பாஜ.க. தலைவர் அமித்ஷா உரிய நேரத்தில் பிரதமர் மோடியிடம் தெரிவித்திருந்தால், மகாராஷ்டிராவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் நிகழ்ந்திருக்காது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ள நிலையில், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்வர் என, தானும், பிரதமர் மோடியும் பலமுறை தெரிவித்ததாகவும், அப்போது எதிர்ப்பு தெரிவிக்காத சிவசேனா, தற்போது புதிதாக கோரிக்கை வைப்பதை ஏற்க முடியாதென்றும் கூறினார். இதற்கு பதிலளித்துள்ள சிவசேனா மூத்த தலைவர் திரு.சஞ்சய் ராவத், ஆட்சியில் சமபங்கு கோரிய தங்களின் கோரிக்கையை, அமித்ஷா உரிய நேரத்தில் பிரதமர் மோடியிடம் தெரிவித்திருந்தால், மகாராஷ்டிராவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் ஆட்சி பகிர்வு குறித்து முடிவெடுப்பதிலிருந்து, பிரதமர் மோடியை பா.ஜ.க. தலைவர்கள் ஒதுக்கி வைத்திருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00