ஐ.என்.எக்‍ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

Nov 20 2019 7:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.என்.எக்‍ஸ் மீடியா வழக்‍கில் திரு.ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

திரு. ப.சிதம்பரம், INX மீடியா நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக சலுகைகள் அளித்ததாக குற்றம்சாட்டி, சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்‍கத்துறையினர் வழக்‍கு தொடர்ந்தனர். இவ்விரு வழக்‍குகளிலும் கைது செய்யப்பட்டு, டெல்லி திஹார் சிறையில் அடைக்‍கப்பட்டுள்ள திரு. சிதம்பரத்திற்கு, சி.பி.ஐ. வழக்‍கில் ஏற்கெனவே ஜாமீன் அளிக்‍கப்பட்டுள்ளது. INX மீடியாவின் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக மத்திய அமலாக்‍கத்துறையினர் தொடர்ந்த வழக்‍கில், ஜாமீன் கோரி, அவர், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்‍கல் செய்த மனு அண்மையில் நிராகரிக்‍கப்பட்டது.

இதனை எதிர்த்தும், தனக்‍கு ஜாமீன் அளிக்‍கக்‍ கோரியும் திரு. சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்‍கல் செய்தார். உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி திரு. S.A. Bobde தலைமையிலான அமர்வு முன்னிலையில், திரு. ப.சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்‍கறிஞர் திரு. கபில்சிபல், கடந்த 3 மாதகாலமாக திரு. சிதம்பரம் சிறையில் அடைக்‍கப்பட்டுள்ளதாகவும், அவரது ஜாமீன் மனுவை விசாரிக்‍க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து திரு.ப.சிதம்பரத்தின் மனுவை இன்று விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00