தமிழக உள்ளாட்சித் தேர்தலில் விதி முறைகள் பின்பற்றப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணிக்‍ கட்சிகள் முறையீடு - நாளை மறுநாள் விசாரணைக்‍கு ஏற்றுக்‍ கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு

Dec 9 2019 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலுக்‍கான வேட்பு மனு தாக்‍கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்த தேர்தலில், இட ஒதுக்‍கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை எனக்‍ கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்யப்பட்டுள்ளது. மனு மீதான விசாரணை நாளை மறுதினம் நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, ஊரக உள்ளாட்சிகளுக்‍கு மட்டும் தேர்தல் அறிவிக்‍கப்பட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சி, மாநாகராட்சி ஆகியவற்றுக்‍கான தேர்தல் குறித்து அறிவிப்பாணை வெளியிடப்படவில்லை. ஊரக உள்ளாட்சிகளுக்‍கான தேர்தல் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில், வார்டு மறுவரையறை பணிகள் மற்றும் இட ஒதுக்‍கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை எனக்‍ கூறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், திமுக சார்பில் இன்று மனு தாக்‍கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்‍காக விசாரிக்‍க கோரிக்‍கை வைக்‍கப்பட்டதையடுத்து, நாளை மறுதினம் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மார்க்‍சிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்‍கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்துள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00