இந்தியாவில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட ஆண் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்

Dec 10 2019 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட ஆண் தலைவர்களில் பிரதமர் திரு.மோடி முதலிடம் பிடித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வெற்றி குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு, இந்த ஆண்டில் அதிக லைக் மற்றும் ரீ ட்வீட் பெற்ற பதிவு எனும் சிறப்பைப் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு ட்விட்டரில், அதிக நபர்களால் தேடப்பட்ட தலைவர்கள், பகிரப்பட்ட பதிவு, பிரபலமான ஹேஷ்டேகுகள் குறித்து தகவல்கள் வெளியாகிவுள்ளன. அதன்படி, இந்த ஆண்டு இந்தியாவில், ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட ஆண் தலைவர்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி முதலிடத்தையும், திரு. ராகுல்காந்தி இரண்டாம் இடத்தையும், திரு. அமித்ஷா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். அதிகம் பேசப்பட்ட பெண் அரசியல் தலைவர்களில் திருமதி. ஸ்மிருதி இரானி முதலிடத்திலும், திருமதி. பிரியங்கா காந்தி 2-வது இடத்திலும் உள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் திரு. மோடி பதிவிட்ட ட்விட்டர் பதிவு, இந்த ஆண்டில் அதிக லைக் மற்றும் ரீ ட்வீட் பெற்ற பதிவு எனும் சிறப்பைப் பெற்றுள்ளது. விளையாட்டுத்துறையை பொறுத்தவரை தோனி பிறந்தநாளுக்‍கு விராட் கோலி வெளியிட்ட ட்விட்டர் பதிவு அதிகம் பேரால் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. சினிமா துறையை பொருத்தவரை, நடிகர் விஜய் பகிர்ந்திருந்த பிகில் பட போஸ்டர் பதிவு அதிக ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.

ஹேஷ் டேக்குகளை பொருத்தவரை, மக்களவை தேர்தல் 2019 எனும் ஆங்கில ஹேஷ்டேக் முதலிடத்தையும், சந்திரயான் 2 எனும் ஹேஷ்டேக் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00