ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டது இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய களங்கம் - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேச்சு

Dec 13 2019 6:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து வடகிழக்‍கு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய களங்கம் என மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

வரும் 15ம் தேதி, அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில், பிரதமர் திரு. மோதி மற்றும் ஜப்பான் பிரதமர் அபே சந்திப்பு நடைபெற இருந்தது. இரு தலைவர்களும், வரும் 17-ம் தேதி மணிப்பூர் மாநிலத்திற்குச் சென்று, இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்த ஜப்பான் வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அஸ்ஸாமில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால், ஜப்பான் பிரதமர் அபேயின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள சந்திப்பு, இருநாடுகளின் வசதிக்‍கேற்ப, பின்னர் நடைபெறும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ஜப்பான் பிரதமரின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ள விவகாரம், நாட்டிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய களங்கம் என மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00