கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் - உத்தரப்பிரதேசத்தில் படகில் சென்று பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு

Dec 14 2019 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் குறித்து உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், பிரதமர் திரு.நரேந்திர மோதி, படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அம்மாநிலத்திற்கு வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோதியை, முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யாநாத் வரவேற்றார். கங்கை நதி பயணிக்‍கும் உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளும் இக்‍கூட்டத்தில் பங்கேற்றனர். கடந்த சில ஆண்டுகளில், கங்கையை தூய்மைப்படுத்த எடுக்‍கப்பட்ட நடவடிக்கைகள் போதிய பலனைத் தரவில்லை. இந்த நிலையில், கங்கையின் கவுமுக் பகுதியில் இருந்து கங்கா சாகர் வரை, மாசு அகற்றி, படகு போக்குவரத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பிரதமர் திரு.நரேந்திர மோதி Atal ghat-ல் உள்ள கங்கை நதியில் விசைப்படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன், உத்தரபிரதேச முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத், பீகார் துணை முதலமைச்சர் திரு.சுஷில் மோடி, உத்தரகாண்ட் முதலமைச்சர் திரு.திரிவேந்திரசிங் ராவத் உள்ளிட்டோர் கங்கையில் பயணம் மேற்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00