ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு - ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

Aug 16 2014 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், ஆடி மாத கடைசி வெள்ளியை யொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், 108 விளக்கு ஏற்றி, பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

புதுக்கோட்டை அருகே உள்ள ஓணான்குடி வீரமா காளியம்மன் கோயிலில், 1,008 விளக்குகள் ஏற்றி சிறப்பு தீப வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு, தில்லைநகர் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் ஆலயத்தில், ஆடி கடைசி வெள்ளியை யொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

திருவாரூரில் உள்ள பிரசித்திபெற்ற சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் குத்துவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. இதில், 501 பெண்கள் கலந்துகொண்டு, விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.

இதனிடையே, பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன்விமரிசையாகதொடங்கியது. இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனமும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. பின்னர் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. ஏராளமானோர் இதில் கலந்துகொண்டு வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது.

புதுச்சேரியில் பழமைவாய்ந்த ஸ்ரீ காமாட்சியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஸ்ரீ லலிதா சகஸ்ர நாம ஜெப ஹோமத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00