மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்க வேண்டும் - தமிழகம் முழுவதும் திருக்கோயில்களில் தொடரும் சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள்

Oct 31 2014 6:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்களின் முதல்வரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான செல்வி ஜெயலலிதா மீது பேரன்பு கொண்ட பொதுமக்களும், கழகத் தொண்டர்களும், மக்களின் முதல்வர் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்க வேண்டி, தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தச்சூரில் அமைந்துள்ள ஸ்ரீசாய்மந்திர் ஆலயத்தில் மக்கள் முதல்வர் மீண்டும் அரியணை ஏற வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு பிறகு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலைக்கோவியிலில் தென்சென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில், கழக நிர்வாகிகள் பலரும், மொட்டையடித்தும், தங்கத்தேர் இழுத்தும் முருகனை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள ஜலாஷாவலியுல்லா தர்காவில் சிறப்பு துவா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி மலர்போர்வை போர்த்தப்பட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதேபோல், மக்கள் முதல்வர் மீண்டும் அரியணை ஏற வேண்டி உதகையில் உள்ள பாறை முனீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் திரளாக பங்கேற்றனர்.

கோவை-திருச்சி சாலையில் உள்ள புகழ்பெற்ற ஜங்கிள் ஃபிர் பள்ளிவாசலில், கோவை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. மாநகராட்சி மேயர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

வேலூர் மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், ஆந்திர மாநிலம் மந்திராலயத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீராகவேந்திரா ஆலயத்தில் சிறப்பு புஜைகள் நடைபெற்றன. வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், கழக நிர்வாகிகள் சிலர் அங்கப்பிரதக்ஷனம் செய்து சுவாமியை வழிபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00