பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தை நடத்த அரச குடும்பத்திற்கு உரிமை உள்ளதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு - மாவட்ட நீதிபதி தலைமையில் நிர்வாகக்‍குழு அமைக்‍கவும் அனுமதி

Jul 13 2020 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தை மன்னர் குடும்பத்தினரே நிர்வகிப்பதை உறுதிப்படுத்தி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி திருக்‍கோயிலில் உள்ள 5 பாதாள அறைகள், கடந்த 2011-ம் ஆண்டில் 7 பேர் கொண்ட அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டன. அதில், தங்கம், வைரம், வைடூரியம் மற்றும் 18 அடியில் தங்க மாலை இருந்தன. இவற்றின் அன்றைய மதிப்பு ஒன்றரை லட்சம் கோடிக்கு மேல் இருக்‍கலாம் என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்தக்‍கோவிலை கமாண்டோ படையினர் துப்பாக்கியுடன் பாதுகாத்து வருகின்றனர். திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் தற்போது, கோவிலை பராமரித்து வரும் நிலையில், பெரிய அளவில் உள்ள 6 -வது அறை திறக்கப்படாமல் உள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்‍கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இக்‍கோயிலை நிர்வகிப்பதில் மன்னர் குடும்பத்திற்கு இருக்‍கும் உரிமை நிலைநாட்டப்படுவதாகவும் தெரிவித்தது. மேலும், இடைக்‍கால ஏற்பாடாக மாவட்ட நீதிபதி தலைமையில் கோயிலை நிர்வகிப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00