மணப்பாறை அருகே பிரசித்தி பெற்ற பொன்னர் சங்கர் ஆலயத்தில் நடந்த அம்பு போடும் திருவிழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று உற்சாகம்

Oct 27 2020 2:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள புகழ் பெற்ற பொன்னர் சங்கர் ஆலயத்தில் அம்பு போடும் திருவிழாவில், ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்துகொண்டனர்.

மணப்பாறை அருகே வீரப்பூர் பெரிய காண்டியம்மன் கோவிலில், நாட்டில் வேளாண் நிலங்கள் செழிக்கவும், மக்கள் பசி பட்டினி இன்றி வாழவும், பட்டியில் உள்ள ஆடு, மாடுகள் நோய்நொடி இல்லாமல் இருக்கவும் கோவிலின் கிழக்கு பகுதிக்கு சென்று அம்புபோடும் நிகழ்வு விஜய தசமி தினமான மகரநோன்பு தினத்தில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மகர நோன்பு தினமான நேற்று, மாலை சாம்புவன் காளை முன்செல்ல பின்னே பொன்னர் குதிரை வாகனத்தில் எழுந்தருள, தேவரடிக்காடு என்ற அம்புபோடும் இடத்தில் பெரியக்காண்டியம்மன் வாழை மரத்தில் அம்பு போடும் மகர நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கனக்கான மக்கள் பங்கேற்றனர்.

அம்பு போட்ட பின் வாழை மரத்தில் இருந்து வரும் பால் நிலத்தில் வடியும். அந்த மண்ணை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்து சென்று தங்கள் நிலங்களில் தூவினால் விளைச்சல் பெருகும் என்பது பக்கத்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் ஏராளமான பக்தர்கள் அந்த மண்ணை எடுத்துச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00