திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது

Nov 29 2020 6:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

மகாதீபத்தையொட்டி செப்புத்தகடால் செய்யப்பட்ட 5 புள்ளி 2 அடி உயரம் கொண்ட கொப்பரை தயாரிக்‍கப்பட்டது. ஆயிரம் மீட்டர் பருத்தித் துணியில் திரி தயாரிக்‍கப்பட்டு, 3 ஆயிரத்து 500 கிலோ நெய் கொண்டு, மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள, இரண்டாயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக, இந்த ஆண்டு பக்‍தர்களுக்‍கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனால் உள்ளூர் பக்தர்கள் மட்டுமே கார்த்திகை மாகாதீப திருவிழாவில் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00