திருப்பதி கோயிலில், 4 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி - தேவஸ்தானம் அறிவிப்பு

Sep 8 2021 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில், 4 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள வருடாந்திர பிரமோற்சவம், கடந்த ஆண்டைப்போலவே பக்தர்கள் இன்றி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து தொற்று பரவல் குறைந்ததன் காரணமாக தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக 300 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் முக்கிய நபர்கள் தரிசனம் மட்டும் நடைபெற்று வந்தது. தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் வீதம் கட்டண தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சுமார் 4 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதில் முதல் கட்டமாக சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 2,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அடுத்த மாதம் 7ம் தேதி முதல் ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பக்தர்கள் இன்றி ரமோற்சவத்தை நடத்த தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பிரமோற்சவத்தின்போது சுவாமி வீதி உலா வரக்கூடிய அந்த வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு தேவஸ்தான தொலைக்காட்சி மற்றும் இதர தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00