திருப்பதியில் உலா் மலா்களால் தயாரிக்கப்பட்ட ஆா்கானிக் அகா்பத்தி : விற்பனையை தொடங்கியது திருப்பதி தேவஸ்தானம்

Sep 14 2021 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதியில், உலா் மலா்களால் தயாரிக்கப்பட்ட ஆா்கானிக் அகா்பத்திகளின் விற்பனையை, தேவஸ்தானம் தொடங்கியது.

திருப்பதி திருமலை மற்றும் அதன் நிர்வாகத்துக்கு உட்பட்ட கோயில்களில், மூலவர், உற்சவர் மற்றும் பரிவார தேவைகளுக்கு அணிவிக்கப்படும் மலர்மாலைகள், நிர்மாலையம் களைந்தபின் தூக்கியெறியப்பட்டு வீணாகிறது. இவற்றை உபயோகமாக பயன்படுத்த திட்டமிட்ட தேவஸ்தானம், பெங்களூரைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, உலர்ந்த மலர்மாலைகளை தனியாக பிரித்து, அவற்றை தூளாக்கி, அவற்றுடன் வாசனை திரவியங்கள் கலந்து, இயற்கை முறையில் அகர்பத்திகளை தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

கோசாலையில் இதற்கென இடம் ஒதுக்கப்பட்டு, அங்கு அகர்பத்திகள் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்குப் பின்னர், அகர்பத்திகள் தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஏழுமலையான் பெயரைப் போற்றும் வகையில், 7 வகையான நறுமணங்களில் அகர்பத்திகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த அகர்பத்திகளை, தேவஸ்தான அதிகாரிகள் நேற்று விற்பனைக்கு கொண்டு வந்தனர். இந்த அகர்பத்திகள், திருமலையின் அனைத்து இடங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், நவீனமயமாக்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக, கடந்த ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்ட சப்தகிரி மாத இதழ், புதிய வடிவில் தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனிடையே, திருப்பதியில் அளிக்கப்பட்டு வரும் சா்வதரிசன டோக்கன்களின் எண்ணிக்கையை, விரைவில் உயா்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அறங்காவலா் குழு தலைவா் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00