மதுரையில் கள்ளழகர் கோவிலுக்கு நெல் கோட்டை கட்டும் அரிய நிகழ்ச்சி : சந்தனம் தெளித்து மாலைகள் அணிவித்து சிறப்புப் பூஜை

Jan 19 2022 1:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில், பாண்டிய மன்னர் காலம் தொட்டு பாரம்பரிய முறைப்படி நடைபெறும் கள்ளழகர் கோவிலுக்கு நெல் கோட்டை கட்டும் அரிய நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பாரம்பரியமிக்‍க தேனூர் கிராமத்தில், ஆண்டுதோறும் தை மாதம், முதலில் அறுவடை செய்யக்கூடிய நெல்களை அழகர்கோவில் பகுதியில் உள்ள கள்ளழகருக்கு, நெல் கோட்டையாக கட்டி அனுப்பி வைப்பது வழக்‍கம். தேனூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர், தனது வயலில் தை மாத முதல் நெல் அறுவடை செய்துள்ளார். இவர் தனது நெல்லை அழகர்கோவில் கள்ளழகருக்கு வழங்குவதற்காக குவியலாக அமைத்து கோட்டை கட்டி கோயிலுக்கு சம்பிரதாய முறைப்படி வழங்கினார். நெல்களை கிராமத்தினர் முன்பாக குவித்து, அதன் முன்பாக சுந்தரவல்லி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது.

குவிக்கப்பட்ட நெல், கிராம வழக்கப்படி கண்மாய் மடை திறப்பாளர் திரு.மடையன் கருப்பு, பாரம்பரிய வழக்கப்படி நெல் கோட்டையைக் கட்டினார். இதற்கு சந்தனம் தெளித்து மாலைகள் அணிவித்து பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் நடையாக எடுத்துசென்று அழகர்கோவிலில் கள்ளழகருக்கு ஒப்படைத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00