சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா தொடக்கம் : ஜூலை 5-ல் தேரோட்டம், ஜூலை 6-ல் ஆனி திருமஞ்சன தரிசன விழா

Jun 27 2022 2:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில், ஆனி திருமஞ்சன திருவிழா, கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக, பக்தர்களின்றி கோயிலுக்குள்ளேயே எளிமையாக நடந்தது. இந்நிலையில், இந்தாண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா, கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. திருவிழாவின் உற்சவ ஆச்சாரியார் கனக சபாபதி தீட்சிதர், கோயில் கொடி மரத்திற்கு பூஜைகள் செய்து, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றி, திருவிழாவை தொடங்கி வைத்தார். கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால், திருமஞ்சன திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றத்துடன் இன்று தொடங்கிய ஆனி திருமஞ்சன திருவிழா, தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறும். முக்கிய விழாவான தேரோட்டம் ஜூலை 5ஆம் தேதியும், ஆனி திருமஞ்சன தரிசன விழா ஜூலை 6ஆம் தேதியும் நடைபெறும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00