மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா- சிவபெருமான் பிட்டுக்‍கு மண் சுமந்த நிகழ்வை ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் தரிசனம்

Sep 7 2022 7:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் பிரசித்திபெற்ற மீனாட்சியம்மன் திருக்‍கோயிலில், ஆவணி மூலத்திருவிழாவின் ஒரு பகுதியாக சிவபெருமான், பிட்டுக்‍கு மண் சுமந்த நிகழ்வை, ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், சிவபெருமானின் திருவிளையாடலை மையமாகக் கொண்டு நடைபெறும் ஆவணி மூலத் திருவிழா, கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி திருவீதி உலா நடைபெற்றதுடன், கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி, மாணிக்கம் விற்றது, தருமிக்கு பொற்கிழி அளித்தது உள்ளிட்ட நிகழ்வுகள் அரங்கேறின. முக்‍கிய நிகழ்வாக, சிவபெருமான், பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக கோயிலில் இருந்து சொக்கநாதர், மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் ஆரப்பாளையம் வைகை ஆற்றோரம் உள்ள புட்டுத்தோப்பு சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினர். விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பூஜையில் வைக்கப்பட்ட புட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00