தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் வெகு சிறப்பாக நடைபெற்ற சுமங்கலி பூஜை, தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகள் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

May 25 2023 2:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் சுமங்கலி பூஜை, தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்த மயிலப்பபுரத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுமங்கலி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளாமான பெண்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடம் சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அமைந்துள்ள உடைய பிராட்டி அம்மன் கோயிலில் மாம்பழத் தேரோட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் வீதி நெடுவெங்கும் மாம்பழங்களை தேரின் மீது சூறைவீசி நேர்த்திகடனை செலுத்தினர்.

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில், சுவாமிக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

நாகை மாவட்டம் திருக்குவளையில் அமைந்துள்ள தியாகராஜ சுவாமி கோயிலில் வசந்த உற்சவர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், சிவ தொண்டர்கள் ஆரூரா தியாகேசா என்ற பக்தி முழக்கத்தோடு தியாகராஜரை சுமந்தபடி நடனமாடியதை, ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00