புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில், தெப்போற்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீகிருஷ்ண அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது

Mar 10 2017 10:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில், தெப்போற்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீகிருஷ்ண அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், தெப்போற்சவ விழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று, ருக்மணிதேவி சமேத மலையப்பசாமி ஸ்ரீ கிருஷ்ண அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினார். பின்னர், திருக்குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த தெப்போற்சவ நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பகதர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

இதனிடையே, சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த கவுன்டம்பட்டி சின்ன மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பெண்கள் மாவிளக்கு மற்றும் பூக்கரகம் எடுத்து வந்து வழிபாடு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் ஏராளமானோர், தங்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு, பாலாபிஷேகம் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்திவந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடியில் உள்ள உச்சினிமாகாளி அம்மன் கோயில் திருவிழாவை யொட்டி, பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்காலில் உள்ள பிரசித்திபெற்ற நித்யகல்யாண பெருமாள் ஆலயத்தில், மாசிமாத பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான பெருமாள் - ரெங்கநாயகி தாயார் திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஹரியும், சிவனும் ஒன்று என்ற வாக்கினை மெய்பிக்கும் விதமாக, சிவன் வேடத்தில் பெருமாள் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00