தருமபுரி மாவட்டத்தில் உள்ள தீர்த்தகிரி ஈஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற மாசிமக தேர் திருவிழா : பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

Mar 18 2017 9:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

தருமபுரி மாவட்டம், தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரி ஈஸ்வரர் திருக்கோயிலில் மாசிமக தேர் திருவிழாவையொட்டி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

தருமபுரி மாவட்டம், தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரி ஈஸ்வரர் திருக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் மாசிமக விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்தேர்திருவிழாவையொட்டி, தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், விநாயகர், தீர்த்தகிரி ஈஸ்வரர், வடிவாம்பிகை உள்ளிட்ட மூன்று அலங்கரிக்கப்பட்ட தேர்களை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் தேர்மீது உப்பு, மிளகு, பொரி, முத்துக்கொட்டை உள்ளிட்டவற்றை வாரியிரைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

நாகை மாவட்டம் திருமருகலை அடுத்த திருகண்ணபுரம் செளரிராஜபெருமாள் ஆலய மாசிமக உற்சவம் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனைமுன்னிட்டு செளரிராஜபெருமாள், தாயாருடன் ஆலய தீர்த்தமான நித்திய புஷ்கரணிக்கு எழுந்தருளினார். அங்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாளும், தாயாரும் மூன்று முறை வலம் வந்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00