கன்னியாகுமரி மாவட்ட கோயிலில் நடைபெற்ற தூக்க நேர்ச்சை வழிபாடு - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Mar 22 2017 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இட்டகவேலி ஸ்ரீநீலகேசி அம்மன் கோவிலில், குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை வழிபாடு நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இட்டகவேலி ஸ்ரீநீலகேசி அம்மன் கோவிலில் அம்மயிறக்க திருவிழா கடந்த 15ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. குழந்தைவரம் வேண்டியும், குழந்தைள் நோய் நொடியின்றி வாழவும் அம்மனை வேண்டி இந்த நேர்ச்சை நடத்தப்படுகிறது. இதையொட்டி தூக்க வில்லில், தூக்கக் காரர்கள் குழந்தைகளை தாங்கிப்பிடித்தபடி அறுபது அடி உயரத்தில் தூக்க, பக்தர்கள் பக்தி பெருக்குடன் தூக்க வில் வண்டியை இழுத்து சுற்றிவந்து நேர்ச்சையை நிறைவு செய்கின்றனர். இதில் இந்த வருடம் 167 குழந்தைகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00