வைணவ ஆச்சார்யார் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு - அமைச்சர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

Apr 29 2017 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

வைணவ சமயத்தை தோற்றுவித்த ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு பிறந்தநாள் விழா, வரும் மே மாதம் 1-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, ராமானுஜர் பிறந்த ஸ்தலமான ஸ்ரீபெரும்புதூரில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சாலை இணைப்பு, குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின்விளக்குகள் அமைத்தல் ஆகியவற்றை ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் மேற்கொண்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளை அமைச்சர்கள் திரு. கடம்பூர் ராஜூ, திரு. சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் திரு.வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஸ்ரீராமானுஜர் போற்றி வணங்கிய காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை, அமைச்சர் திரு. சேவூர் எஸ். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, காமாட்சியம்மன் கோயிலில் வெள்ளித்தேர் இழுத்து சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, ஸ்ரீராமானுஜரின் 1000-மாவது ஆண்டு பிறந்தநாளையொட்டி இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாக அலுவலர் திரு. முனியாண்டி தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00