சபரிமலை அய்யப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைகளுக்காக நாளை நடை திறப்பு : 24 நாட்கள் நடை திறக்கப்பட்டிருக்கும் என அறிவிப்பு

Jun 13 2017 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை அய்யப்பன் கோயிலில், ஆனி மாத பூஜைகளுக்காக நாளை நடை திறக்கப்படவுள்ளது. 24 நாட்கள் நடை திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதப்பிறப்பை ஒட்டியும் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், ஆனி மாத பூஜைகளுக்காக நாளை மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பபடவுள்ளது. இந்நிலையில், புதிதாக அமைக்கப்படவுள்ள தங்க கொடிமர பிரதிஷ்டை சடங்குகளுக்காக நாளை திறக்கப்படவுள்ள கோயில்நடை அடுத்த மாதம் 7-ம் தேதிவரை தொடர்ந்து 24 நாட்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மாலை கோயில் நடை திறக்கப்பட்டு, நாளை மறுநாள் காலை முதல் 19-ம் தேதிவரை ஆனி மாத பூஜைகள் நடைபெறும். பின்னர், கொடிமர பிரதிஷ்டைக்கு முன்னோடியான பூஜைகள் தொடங்குகின்றன. முன்னோடி பூஜைகள் முடிந்தபின்னர், 25-ம் தேதி காலை கொடிமர பிரதிஷ்டை நடக்கிறது. 28-ம் தேதி காலை முதல், 10 நாள் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூலை 7-ம் தேதி பம்பையில் ஆறாட்டுடன் திருவிழா நிறைவடைந்து, இரவு 10 மணிக்கு கோயில்நடை அடைக்கப்படும். மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு விழாக்களுக்கு பிறகு சபரிமலை அய்யப்பன் கோயில் நடை 20 நாட்களுக்கு மேல் திறந்திருப்பது மிகவும் அபூர்வமான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00