கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 350 சிறிய கோயில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்கப்பட்டன : சிறு கோயில் பூசாரிகள், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

Jun 19 2017 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 350 சிறிய கோயில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சிறு கோயில் பூசாரிகளும், ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 350 சிறிய திருக்கோயில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிராம கோயில் பூசாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பூஜை உபகரணங்களை பெற்றுக்கொண்டனர். பின்னர் இத்திட்டத்தை கொண்டு வந்த மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் சிவஞானபுரம் துர்க்கா பரமேஸ்வரி ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி நவமி தினத்தையொட்டி யாகசாலை மற்றும் கும்பகலச பூஜை நடைபெற்றது. அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், மகாதீபாராதனைகளும் நடைபெற்றன. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அரியலூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசு தலைமைக்கொறடா மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல், நாகை மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகளும், ஏராளமான இஸ்லாமிய பெருமக்களும் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட பெரிய பட்டினத்தில் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில், அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்ட மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக சங்கத்தின் சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கோவூர் கிராமத்தில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுப்பெருவிழாவையொட்டி, திருத்தேர் பவனி நடைபெற்றது. இதனையொட்டி, சிறப்புத்திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியிலுள்ள அந்தோணியார் ஆலயத்தில் திருத்தேர் பவனிநடைபெற்றது. இதில், உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும், பிரார்தனை செய்தவாறு ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தூய சவேரியார் ஆலய திருவிழாவையொட்டி, நற்கருணை பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00