நாகூர் தர்காவின் 461-வது கந்தூரிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று சிறப்புத் தொழுகை

Feb 18 2018 1:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 461வது கந்தூரிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பல்லாயிரக்‍கணக்கானோர் பங்கேற்று சிறப்புத் தொழுகை நடத்தினர்.

நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூரில் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. பல்வேறு சமயத்தவரும் வந்து வழிபட்டு செல்லும் புகழ்பெற்ற இந்த தர்காவின் 461வது ஆண்டு கந்தூரி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக, நாகப்பட்டினத்திலிருந்து, அலங்கரிக்‍கப்பட்ட ரதங்களில் கொடி ஊர்வலம் நடைபெற்றது. கொடிகள் முக்கிய வீதிகள் வழியாக நாகூரை வந்தடைந்த பின் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, தர்காவின் 5 மனோராக்களிலும், ஒரே நேரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது, வண்ணமிகு வாணவேடிக்கைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான, நாகூர் ஆண்டவர் சந்நதிக்கு சந்தனம் பூசும் வைபவம் 26ம் தேதி நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00