திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீமகா காளநாதசுவாமி ஆலய சோம யாகம் : ஏராளானோர் சுவாமி வழிபாடு

May 22 2018 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் மாவட்டம் கோவில்திருமாளம் என்ற ஊரில் அமைந்துள்ள புராண சிறப்பு வாய்ந்த ஸ்ரீமகா காளநாதசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சோம யாகத்தில் ஏராளானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

63 நாயன்மார்களில் ஒருவரான ஸ்ரீசோமாசிமாற நாயன்மார், வேத விற்பன்னர்களைக்‍ கொண்டு கோவில்திருமாளம் ஊரில் உள்ள ஸ்ரீஅச்சம் தீர்த்த விநாயகர் சன்னதியில் சோம யாகம் நடத்தியபோது ஸ்ரீதியாகராஜசுவாமி தனது மனைவியுடன் வேடன் வேடத்தில் வந்தபோது அவரை அங்கிருந்தவர்கள் விரட்ட முற்பட்டனர். ஆனால் வந்திருப்பது இறைவன் என ஸ்ரீசோமயாஜிமாற நாயன்மார் உணர்ந்துகொள்ளவே, அவருக்‍கு ஸ்ரீ தியாகராஜசுவாமியும், அம்பாளும் காட்சி அளித்ததாக புராண வரலாறு.

அதன்படி, வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரநாளான நேற்று ஸ்ரீஅச்சம் தீர்த்த விநாயகர் சன்னதியில் இந்த யாகம் நடைபெற்றது. அப்போது ஸ்ரீதியாகராஜசுவாமி அம்பாளுடன் யாகத்திற்கு எழுந்தருளினார். இந்த யாகத்தில் கலந்துகொள்பவர்கள், செய்த பாவங்கள் உட்பட அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுபடுவார்கள் என்பதால் ஏராளமான பக்‍தர்கள் சோம யாகத்தில் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோவிலில் இன்று வைகாசி விசாகப் பெருவிழா திருக்கொடியேற்றத்துடன விமரிசையாக தொடங்கியது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் உட்பட பழனி கோவில் இணை ஆணையர் திரு. செல்வராஜ், துணை ஆணையர் திரு. செந்தில் குமார் ஆகியோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00