தாமிரபரணி மகாபுஷ்கர விழாவையொட்டி, பாபநாசம், அருகன்குளம் ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல் - பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுவாமிகள், தாமிரபரணி அன்னைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு

Oct 12 2018 1:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

தாமிரபரணி மகாபுஷ்கர விழாவையொட்டி பாபநாசம், அருகன்குளம் ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி வழிபாடு நடத்தினர்.

தாமிரபரணி மகாபுஷ்கர விழாவையொட்டி, அருகன்குளத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு ஆரத்தி நடைபெற்றது. 144 ஆண்டுகளுக்கு பின்னர் தாமிரபரணி மஹாபுஷ்கர திருவிழா நேற்று தொடங்கியது. இதனையொட்டி நெல்லை, பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்பட 149 பகுதிகளில் புஷ்கர விழாவிற்கான பூஜைகள் தொடங்கின. வரும் 23ம் ‍தேதி வரை நடைபெறும் மகாபுஷ்கர விழாவில், தமிழகம் மட்டுமின்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் லட்சக்கணக்கானோர் கலந்துக் கொண்டு வழிபாடு செய்ய உள்ளனர். இதற்காக பல்வேறு ஆன்மீக அமைப்புகள் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த சுவாமிகள், பாபநாசம் பகுதியில் நேற்று புனித நீராடி பூஜைகள் செய்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று மாலை தாமிரபரணி அன்னைக்கு ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக காசியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள பூஜை பொருட்களை கொண்டு ஆரத்தி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நெல்லை சந்திப்பு அருகன்குளம் பகுதியிலும் பக்தர்கள் ஏராளமானோர் தாமிரபரணி ஆற்றில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று இரவு சேரன்மகாதேவி அருகேயுள்ள திருப்படைமருதூர் பகுதிக்கு சென்று அங்கு தாமிபரணி ஆற்றுக்கு புஷ்கர திருவிழாவையொட்டி சிறப்பு பூஜை நடத்தினர். இதனைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00