திருப்பதியில் நாளை 5 மணிநேரம் தரிசனம் ரத்து : தூய்மைப்பணி நடைபெறவுள்ளதால் தேவஸ்தானம் அறிவிப்பு

Sep 23 2019 6:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால், நாளை 5 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதியில் ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கும் நாளுக்கு முந்தைய செவ்வாய் கிழமையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலை தூய்மைப்படுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், திருப்பதியில், வரும் 30ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 8ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு, நாளை ஏழுமலையான் கோயில் தூய்மைப்படுத்தப்பட உள்ளது. அதனால், நாளை காலை 6 மணி முதல் 11 மணி வரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தூய்மைப்படுத்தும் பணி நிறைவடைந்ததும், பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். நாளைய தினம் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் ஏழுமலையானுக்கு தனியாக நடத்தப்பட உள்ளது. ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி, யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் ஆகிய நான்கு உற்சவங்களுக்கு முன் ஏழுமலையான் கோயில் தூய்மைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00