தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக திருப்பதியில் 4,300 போலீசார் குவிப்பு -ஆக்டோபஸ் கமாண்டோ படை பாதுகாப்புடன் மலையப்ப சுவாமி ஊர்வலம்

Oct 3 2019 6:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக திருப்பதியில் 4,300 போலீசார் குவிக்‍கப்பட்டு உச்சக்‍கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆக்டோபஸ் கமாண்டோ படை பாதுகாப்புடன் மலையப்ப சுவாமி ஊர்வலம் நடைபெறுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவத்தில், பக்தர்கள் கூட்டத்துடன் ஊடுருவி, தீவிரவாதிகள், நாசவேலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு திருமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தினந்தோறும் நடைபெறும் மலையப்பப சுவாமி ஊர்வலத்தை ஆக்டோபஸ் கமாண்டோ படை பாதுகாப்புடன் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆயிரத்து 500 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பக்‍தர்கள் கூட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர். திருப்பதி மலையில் மட்டும் 4,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவிலும் குறிபார்த்து சுடக்கூடிய அதிநவீன பைனாகுலர் பொருத்தப்பட்ட எந்திர துப்பாக்கிகளுடன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 1000 காவலர்களை கூடுதலாக நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00