உலகக் கோப்பை அரையிறுதியில் ரன் அவுட் : நான் 'டைவ்' அடித்திருக்க வேண்டும் - மனம் திறந்தார் தோனி

Jan 13 2020 10:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக் கோப்பை அரையிறுதியில், ரன் அவுட் ஆனது குறித்த தனது கருத்தை, இந்திய கிரிக்கெட் அணி வீரர் எம்.எஸ்.தோனி முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதியில், நியூசிலாந்து அணியிடம், 18 ரன்கள் வித்தியாத்தில், இந்திய அணி தோல்வி அடைந்தது. தோனியின் ரன் அவுட், ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இதுதொடர்பாக, இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த அவர், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது, மனம் திறந்து பேசியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில், அந்த இரண்டு அங்குல தூரத்தை தான் பாய்ந்து சென்று கடந்திருக்க வேண்டும் என்றும், இது தனக்‍குள் உறுத்திக்‍ கொண்டே இருப்பதாகவும் கூறினார். தனது முதல் ஒருநாள் போட்டியில் ரன் அவுட் ஆனதாகவும், நியூசிலாந்து உடனான அரையிறுதியிலும் ரன் அவுட் ஆனேன் என்றும் தெரிவித்தார்.

அண்மையில் பேட்டி அளித்த, இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, 'ஒருநாள் போட்டிகளிலிருந்து தோனி விரைவில் ஓய்வு பெறலாம் என்றும், 'டுவென்டி-20' போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட அவர் முயற்சிக்‍கலாம் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00