ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி : 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அபாரம்
Jan 12 2024 1:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.120124
மொகாலியில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களின் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, இறுதியில் 17.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.