இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி : ஹாமில்டனில் நாளை தொடக்கம்
Jan 28 2020 6:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி, Hamilton-ல் நாளை நடைபெறுகிறது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி-20 தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில், இதுவரை நடைபெற்ற 2 ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3-வது டி20 போட்டி, Hamilton-ல் நாளை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இப்போட்டி நாளை பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய வீரர்கள் களமிறங்குவார்கள் என்பதால், ரசிகர்கள் இப்போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.