நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஃபெர்குசனுக்கு கொரோனா சோதனை - உடல்நலக் குறைவால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை
Mar 14 2020 1:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் Lockie Ferguson உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று சோதனை நடத்தப்பட்டது.
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் Kane Richardson உடல் நலக்குறைவு ஏற்ப்டடது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அவருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்ததை அடுத்து, அவரது அணியுடன் இணைய அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து வீரர் Ferguson-க்கு தொண்டை வலி ஏற்பட்டது. அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்ய உள்ளனர்.