நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் - செரினா வில்லியம்ஸ் மற்றும் Alexander Zverev கால் இறுதிக்கு முன்னேற்றம்

Sep 10 2020 9:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், அமெரிக்‍காவின் Serena Williams மற்றும் ஜப்பானின் Naomi Osaka ஆகியோர் அரையிறுதிக்‍கு முன்னேறியுள்ளனர்.

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் உலகின் முன்னணி வீரர் - வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது இந்தப் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் மகளிர் ஒற்றையர்​ பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில், தரவரிசையில் 3-ம் இடத்தில் உள்ள அமெரிக்‍காவின் Serena Williams, பெல்ஜியத்தின் Tsvetana Pironkova-வை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், முதல் செட்டை 4-க்‍கு 6 என இழந்த செரினா, பின்னர் சுதாரித்துக்‍கொண்டு அதிரடியாக விளையாடி, அடுத்த இரு செட்களை தனதாக்‍கினார். இதன்மூலம் 4-6, 6-3, 6-2 என்ற செட்கணக்‍கில் வெற்றிபெற்று, Serena Williams அரையிறுதிக்‍கு முன்னேறினார்.

ஆடவருக்‍கான காலிறுதி ஆட்டம் ஒன்றில், தரவரிசையில் 3-ம் இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் Daniil Medvedev, சகநாட்டு வீரர் Andrey Rublev-வை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 7-6, 6-3, 7-6 என்ற செட்கணக்‍கில் வெற்றிபெற்று, Medvedev அரையிறுதிக்‍கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில், தரவரிசையில் 4-ம் இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை Naomi Osaka, அமெரிக்‍காவின் Shelby Rogers-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய Osaka, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று, அரையிறுதிக்‍கு முன்னேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00