ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி - 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வென்றது

Oct 23 2020 10:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

மணீஷ் பாண்டே, விஜய்சங்கரின் அபார ஆட்டத்தால், ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வென்றது.

துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில், ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 36 ரன்களும், பென்னி ஸ்டோக்‍ஸ் 30 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் அணியில் சிறப்பாக பந்துவீசிய Jason Holder 3 விக்‍கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து 155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பேர்ஸ்டோ அடுத்தடுத்து ஆட்டமிழந்து, அந்த அணிக்‍கு அதிர்ச்சியை ஏற்படுத்தினர். பின்னர் களமிறங்கிய மணீஷ் பாண்டே, விஜய் ஷங்கர் ஜோடி, தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில், அந்த அணி 18 புள்ளி 1 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 156 ரன்களை எடுத்து , 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மணிஷ் பாண்டே 83 ரன்களுடனும், சங்கர் 52 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்‍காமல் களத்தில் இருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00