இங்கிலாந்து அணிக்கு எதிராக 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி: டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்தது

Mar 7 2021 11:16AM
எழுத்தின் அளவு: அ + அ -
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது.

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களில் சுருண்டது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 365 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள், இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 65 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை அந்த அணி இழந்தது.ஜோ ரூட், டான் லாரன்ஸ் ஆகியோர் சற்று தாக்குபிடித்து ஆடினர். இறுதியில் 135 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இந்தியா கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளதோடு, ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00