ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில், இன்று பெங்களூரு, கொல்கத்தா அணிகள் சென்னையில் மோதல் - மும்பையில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் டெல்லி, பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை
Apr 18 2021 3:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில், இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில், பெங்களூரு, கொல்கத்தா அணிகளும், மும்பையில் நடைபெறும் போட்டியில் டெல்லி, பஞ்சாப் அணிகளும் மோத உள்ளன.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், கடந்த 9-ம் தேதி தொடங்கி, சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட ஆறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 9 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று, இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னையில், பிற்பகல் மூன்று முப்பது மணிக்கு நடைபெறும் போட்டியில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோத உள்ளன. மும்பையில், இன்றிரவு ஏழு முப்பது மணிக்கு நடைபெறும் போட்டியில், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணியும், ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.