ஆன்லைனில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடக்கம் - தமிழக வீரர் ஆனந்த் தலைமையில் இந்திய அணி பங்கேற்பு

Sep 8 2021 10:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆன்லைன் மூலம் இன்று தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில், 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில், 12 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.

கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்தியா, ரஷ்யா அணிகள் கூட்டாக சாம்பியன் பட்டத்தை வென்றன.‍ இந்த ஆண்டுக்கான உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியும் ஆன்லைன் மூலம் நடக்கிறது. இந்த போட்டி இன்று தொடங்கி வரும் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. 12 சுற்றுகளாக இந்த போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும். 5 முறை உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் 12 பேர் கொண்ட இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்கிறது. அனுபவம் மற்றும் இளம் வீரர்களின் சரியான கலவையாக இந்திய அணி உள்ளதாகவும், சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை வெல்வோம் என்றும் விஸ்வநாதன் ஆனந்த் நம்பிக்‍கை தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00