பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு - கிராம மக்கள் பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு

Sep 13 2021 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

டோக்‍கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு, சொந்த ஊரில் மேளதாளம் முழங்க பொதுமக்‍கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜப்பான் தலைநகர் டோக்‍யோவில் அண்மையில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்‍ போட்டியில், உயரம் தாண்டுதலில், தமிழக வீரர் வெள்ளிப்பதக்‍கம் வென்று அசத்தினார். கடந்த 2016-ம் ஆண்டில் நடைபெற்ற ரியோ பாரா ஒலிம்பிக்‍கில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன்மூலம் பாரா ஒலிம்பிகில் 2​பதக்‍கங்களை வென்று நாட்டுக்‍கு அவர் பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில், பதக்‍கத்துடன் சொந்த ஊருக்‍கு வந்த மாரியப்பனுக்‍கு, காடையாம்பட்டி அருகே, கிராம மக்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர், பட்டாசு வெடித்து மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். சொந்த ஊரான பெரியவடகம்பட்டியில், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மீது மாரியப்பனை அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

முன்னதாக சேலம் மாவட்ட ஆட்சியர் திரு. கார்மேகம், மாரியப்பனுக்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து கவுரவித்தார். தனக்‍கு உற்சாக வரவேற்பு அளித்த ஊர் மக்‍கள் உள்ளிட்ட அனைவருக்‍கும் மாரியப்பன் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00