உலகக்‍கோப்பை தொடருக்‍குப்பின் டி-20 அணி கேப்டன் பதவியில் இருந்து விலகல் - விராட் கோலி அறிவிப்பு

Sep 17 2021 7:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

துபாயில் நடைபெறும் டி-20 உலகக்‍கோப்பை கிரிக்‍கெட் தொடருக்‍குப் பின், இந்திய கிரிக்‍கெட் அணியின் டி-20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்‍கெட் அணி கேப்டன் விராட் கோலி, தனது டிவிட்டரில் விடுத்துள்ள அறிவிப்பில், ஒருநாள் போட்டி, டெஸ்ட் மற்றும் டி-20 என அனைத்து வகையான கிரிக்‍கெட்டிலும், 9 ஆண்டுகளாக விளையாடி வருவதாகவும், கடந்த 6 ஆண்டுகளாக கேப்டனாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனது அதிகப்படியான பணிச்சுமையை குறைக்‍கும் நோக்‍கில், துபாயில் நடைபெறும் டி-20 உலகக்‍கோப்பை கிரிக்‍கெட் தொடருக்‍குப் பின், இந்திய கிரிக்‍கெட் அணியின் டி-20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக நீடிப்பேன் என்றும், டி-20 போட்டிகளில் பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடுவேன் எனவும் தெரிவித்துள்ளார். அனைவரிடமும் கலந்து ஆலோசித்த பிறகே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ள விராட் கோலி, இதற்காக எனது பயணத்தில் உதவிய அனைவருக்‍கும் நன்றி தெரிவித்துக்‍ கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00