ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், ஜூனியர் உலக கோப்பை ஹாக்‍கி இன்று தொடக்கம் - ஃபிரான்சை சந்திக்கிறது இந்தியா

Nov 24 2021 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜூனியர் உலக கோப்பை ஹாக்‍கி போட்டி, ஒடிசாவில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் ஃபிரான்ஸை எதிர்கொள்கிறது.

21 வயதுக்குட்பட்டோருக்‍கான 12-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்‍கி போட்டி, ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று தொடங்கிறது. வரும் 5-ந்தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டித்தொடரில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'A' பிரிவில் பெல்ஜியம், சிலி, மலேசியா, தென்ஆப்பிரிக்கா அணிகளும், 'B' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஃபிரான்ஸ், போலந்து, கனடா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 'C' பிரிவில் ஸ்பெயின், நெதர்லாந்து, தென் கொரியா, அமெரிக்காவும், 'D' பிரிவில் ஜெர்மனி, ஆர்ஜென்டினா, பாகிஸ்தான், எகிப்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். கொரோனா பயணக்கட்டுப்பாடுகளை காரணம் காட்டி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் விலகி விட்டன. 6 முறை சாம்பியனான ஜெர்மனி, 2 முறை சாம்பியனான இந்தியா மற்றும் பெல்ஜியம், நெதர்லாந்து அணிகள் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்ணணியில் உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00