புதுக்கோட்டையில் பொங்கல் பண்டிகை - களைகட்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் : கொரோனா விதிகளை பின்பற்றி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள்

Jan 13 2022 1:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொங்கல் பண்டிகையையொட்டி, புதுக்கோட்டை மாவட்டம் தச்சன் குறிச்சியில், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

பொங்கல் பண்டியையை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் ஆண்டுதோறும் ஜனவரி 1-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 650-க்கும் மேற்பட்ட காளைகள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளன. 300 மாடுபிடி வீரர்களும் களமிறங்கியுள்ளனர். மாடுபிடி வீரர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என்பதை சரி பார்த்த பின்னரே களத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். நான்கு குழுக்களாக களமிறங்கிய வீரர்கள், சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், களத்தில் நின்று விளையாடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும், கட்டில், பீரோ, மெத்தை, கிரைண்டர், மிக்ஸி, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00