திருச்சி திருவெறும்பூர் அருகே நடைபெறும் ஜல்லிக்‍கட்டு - சீறிப் பாயும் காளைகள் : களமாடும் இளைஞர்கள்

Jan 21 2022 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் கூத்தப்பார் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தப்பாரில், நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு போட்டியில், 400 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். மாடுபிடி வீரர்கள், உறுதிமொழி ஏற்று கொண்ட பின், வாடிவாசலில் காளைகளை அடக்க களமிறங்கினர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், மருத்துவ பரிசோதனைக்கு பிறகே, வாடிவாசலில் அனுமதிக்கப்பட்டன. இதேபோல், மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 3 பிரிவுகளாக களமிறங்குகின்றனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, மாடுபிடி வீரர்கள், போட்டி போட்டுக்‍கொண்டு அடக்கினர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க, காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக வெளியூர் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பார்வையாளர்கள் மட்டும் சுழற்சி முறையில், ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00