இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 4-வது டி-20 கிரிக்கெட் போட்டி : இந்திய அணி தொடரை வெல்லும் என எதிர்பார்ப்பு

Aug 6 2022 4:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்‍கு இடையிலான நான்காவது டி-20 கிரிக்‍கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் இந்திய அணி இரண்டிலும், மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், 2 - 1 என இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் நான்காவது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில் நகரில் இன்று நடைபெறுகிறது. கடந்த போட்டியில் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முழுவதுமாக குணமடைந்து விட்டதால் அவர் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என கூறப்படுகிறது. இன்றையப் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை வெல்லலாம். எனவே, டி-20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், தோல்விக்கு பதிலடி கொடுக்க மேற்கிந்திய தீவுகள் அணியும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றையப் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00