செர்பியாவில் நடைபெறும் உலக மகளிர் மல்யுத்தப்போட்டி - ஸ்வீடன் வீராங்கனையை தோற்கடித்து வெண்கலம் வென்றார் இந்தியாவின் வினேஷ் போகத்

Sep 15 2022 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக மகளிர் மல்யுத்தப்போட்டியில், 53 கிலோ எடைப் பிரிவில் ஸ்வீடன் வீராங்கனையை தோற்கடித்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத், வெண்கலப்பதக்‍கம் வென்றுள்ளார்.

செர்பியா தலைநகர் பெல்கிரேடில் 17-வது உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் அரியானாவை சேர்ந்த வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்றார். பெண்களுக்கான 53 கிலோ உடல் எடைப்பிரிவில் போட்டியிடும் அவர், தகுதிச்சுற்றுக்‍கு பிந்தைய சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எசிமோவாவை தோற்கடித்தார்.

பின்னர் அஜர்பைஜான் வீராங்கனை லேலா குர்பானோவா காயம் காரணமாக விலகியதால் வெண்கலப் பதக்கச் சுற்றுக்குள் வினேஷ் போகத் நுழைந்தார். அந்த போட்டியில் ஸ்வீடன் வீராங்கனை எம்மா மால்ம்கிரெனை 8-0 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து வினேஷ் போகத், வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக மல்யுத்த போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00