சர்வதேச மகளிர் டென்னிஸ் சென்னை ஓபன் தொடர் : ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் விளையாட லிண்டா தகுதி

Sep 17 2022 11:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் விளையாட செக் குடியரசின் லிண்டா பிரஹ்விர்தோவா தகுதி பெற்றார்.

சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டிகள் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் தொடங்கியது. இதில், ஒற்றையர் பிரிவின் முதல் காலிறுதி போட்டியில் கனடாவின் யூஜெனி பவுச்சார்ட், அர்ஜெண்டினாவின் நதியா பொடோர்ஸ்கா ஆகியோர் விளையாடினர். இதில், 1-6, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் நதியா பொடோர்ஸ்கா அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இதேபோல், மற்றோரு ஆட்டத்தில், செக் குடியரசின் லிண்டா பிரஹ்விர்தோவா, ரஷ்யாவின் வார்வரா கிரச்சேவா ஆகியோர் மோதினர். இதில், 6-4, 6-3 என்ற நேர் செட்களை கைப்பற்றி அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார். இரண்டாம் காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற லிண்டாவிற்கு தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், சென்னை ஓபன் தொடரில் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டது. இதனிடையே, காலிறுதி சுற்றுகள் அனைத்தும் நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளுக்கான அரையிறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00