22வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் - தொடக்க ஆட்டத்தில் கத்தாரை 2க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஈகுவேடார் அணி வெற்றி

Nov 21 2022 8:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் கத்தாரை 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஈகுவேடார் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த 22-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர், கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்கும் இத்திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சி மற்றும் கண்கவர் வாண வேடிக்கை நிகழ்ச்சியினை கால்பந்து ரசிகர்கள், சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். தொடர்ந்து தொடரை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது.

முதல் நாள் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தார் அணியும், ஈகுவேடார் அணியும் மோதின. அல்கோர் நகரில் உள்ள இலபேத் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஈகுவேடார் அணி, 2 கோல்களை அடித்தது. அந்த அணியின் வீரர் என்னர் வேலன்சியா 2 கோல்களை அடித்து அசத்தினார். இறுதிவரை கத்தார் அணி கோல்கள் ஏதும் அடிக்காததால், ஈகுவேடார் அணி 2க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஈகுவேடார் அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த அணியின் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று நடைபெறும் போட்டிகளில் நெதர்லாந்து, செனகல் அணிகளும், வேல்ஸ், அமெரிக்கா அணிகளும் மோதுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00