இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததால் டெஸ்ட் தொடரை 2க்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி வென்றது

Mar 13 2023 6:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததால் டெஸ்ட் தொடரை 2க்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்தியா வெல்ல மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. கடந்த 9ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 480 ரன்கள் எடுக்க இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 571 ரன்களை குவித்தது. இரு அணிகளும் முதல் இன்னிங்சை பூர்த்தி செய்ய 4 நாட்கள் எடுத்துக்கொண்டதால், போட்டி டிராவை நோக்கி பயணித்தது. 5வது நாளான இன்று ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களும் எடுத்த நிலையில் இரு அணி கேப்டன்களும் போட்டியை டிராவில் முடித்துக்கொள்ள ஒப்புக்கொண்டனர். தொடரின் சிறந்த வீரருக்கான விருதை அஸ்வினும், ஜடேஜாவும் பகிர்ந்துகொள்ள 4வது டெஸ்டின் சிறந்த வீரராக விராட் கோலி தேர்வானார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00