ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி : தொடரில் இருந்து வெளியேறியது லக்னோ அணி

May 25 2023 8:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ஆகாஷ் மத்வாலின் மிரட்டலான பந்துவீச்சால் 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 41 ரன்கள் எடுத்தார். பின்னர், 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, ஆகாஷ் மத்வாலின் அசத்தலான பந்துவீச்சால் 101 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியடைந்தது. அத்துடன், தொடரில் இருந்தும் லக்னோ அணி வெளியேறியது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், நாளை நடைபெறும் குவாலிபையர்-2 போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை, மும்பை அணி எதிர்கொள்கிறது. மிரட்டலாக பந்துவீசி 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஆகாஷ் மத்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00